#Pune | திடீர் பள்ளத்திற்குள் பாய்ந்த டேங்கர் லாரி… உயிர்தப்பிய ஓட்டுநர்!

புனேவில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் டேங்கர் லாரி ஒன்று விழுந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மகாராஷ்டிராவின் புனேவில் மாநாகராட்சிக்கு சொந்தமான தண்ணீர் லாரி, தீடிரென ஏற்பட்ட பள்ளத்தில் மூழ்கிய வீடியோ ஒன்று இணையத்தில்…

#Pune - Tanker lorry that overturned in a ditch in an instant... Driver survived!

புனேவில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் டேங்கர் லாரி ஒன்று விழுந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மகாராஷ்டிராவின் புனேவில் மாநாகராட்சிக்கு சொந்தமான தண்ணீர் லாரி, தீடிரென ஏற்பட்ட பள்ளத்தில் மூழ்கிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. புத்வார் பேத் பகுதியில் லாரி சென்று கொண்டிருந்தபோது, திடீரென பள்ளம் ஏற்பட்டு, லாரியின் பின்பகுதி முதலில் மூழ்கியுள்ளது. டிரக்கின் முன்பகுதி சேற்றில் மூழ்காததால், டிரைவர் அதிலிருந்து மெதுவாக வெளியேறினார்.

இதனையடுத்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், நீண்ட நேர போராட்டத்திற்கு பின் லாரியை மீட்டனர். மாநகர போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்ட சம்பவம் அப்பகுதி குடியிருப்புவாசிகள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்புக்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ள அரசு அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.