#ActorNani நடித்த சூர்யாவின் சனிக்கிழமை OTT ரிலீஸ் – படக்குழு அறிவிப்பு!

நானி நடிப்பில் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் சூர்யாவின் சனிக்கிழமை திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்து படக்குழு அறிவித்துள்ளது. தெலுங்கில் முன்னணி நடிகராக இருகும் நானி, வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் உடையவர்.…

#ActorNani Starrer Suriya's Saturday OTT Release - Crew Announcement!

நானி நடிப்பில் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் சூர்யாவின் சனிக்கிழமை திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்து படக்குழு அறிவித்துள்ளது.

தெலுங்கில் முன்னணி நடிகராக இருகும் நானி, வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் உடையவர். நானியின் முந்தைய திரைப்படங்களான ‘ஷியாம் சிங்கா ராய்’, ‘அடடே சுந்தரா’ திரைப்படங்கள் அமோக வரவேற்பினைப் பெற்றன. அதனைத்தொடர்ந்து வெளியான தசரா, ஹாய் நான்னா கலவையான விமர்சனங்களைப் பெற்றன.

தற்போது டிவிவி என்டர்டெர்யின்மென்ட் தயாரிக்கும் ‘சரிபோத சனிவாரம்’ (சூர்யாவின் சனிக்கிழமை) எனப் பெயரிடப்பட்டுள்ள படம் ஆகஸ்ட் 29ம் தேதி வெளியாகியது. இவருடன் எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இதையும் படியுங்கள் : கமல்ஹாசனின் #ThugLife படப்பிடிப்பு நிறைவு!

இந்த படம் விமர்சன மற்றும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் உலகம் முழுவதும் முதல்நாளில் ரூ.25 கோடி வசூலித்து அசத்தியது. இதனைத் தொடர்ந்து ‘சூர்யாவின் சனிக்கிழமை’ ரூ.100 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு கடந்த வாரம் போஸ்டர் வெளியிட்டு தெரிவித்திருந்தது.இந்த திரைப்படத்தை தொடர்ந்து நானி, ‘கோர்ட்’ மற்றும் ‘ஹிட் 3’ ஆகிய 2 திரைப்படங்களில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். சமீபத்தில் ‘ஹிட் 3’ படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியது.

இந்த நிலையில் வசூலில் சாதனை படைத்து வந்த சூர்யாவின் சனிக்கிழமையின் ஓடிடி அறிவிப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் வருகிற செப்டம்பர் 26ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.