பூலித்தேவன் பிறந்தநாள் – தலைவர்கள் புகழ்வணக்கம்!

விடுதலைப் போராட்ட வீரர் பூலித்தேவன் பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் புகழ்வணக்கம் தெரிவித்துள்ளனர்.

விடுதலைப் போராட்ட வீரர் பூலித்தேவன் பிறந்தநாளை முன்னிட்டு திமுக தலைவரும் முன்னாள முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதில், சிப்பாய்ப் புரட்சிக்கு நூறாண்டு முன்பே அந்நியர் ஆட்சிக்கு எதிராக வெகுண்டெழுந்த தமிழ் வீரர் பூலித்தேவர் பிறந்தநாள். தன்னலத்தை விடுத்து தமிழ்நிலத்தின் தன்மானமே பெரிதெனக் கருதி ஏகாதிபத்திய எதிர்ப்புக் களத்தில் போரிட்ட மாவீரர் பூலித்தேவருக்கு என் புகழ் வணக்கத்தை உரித்தாக்குகிறேன்!” என்று தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியிருப்பதாவஹு, “ஆங்கிலேயர் ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய தமிழ் மண்ணின் மாவீரர் பூலித்தேவரின் பிறந்த நாள் இன்று. அடிமைத்தனத்தை வீழ்த்திட வீறுகொண்டு எழுந்த பூலித்தேவரின் வீரத்தைப் போற்றுவோம். அவர் புகழ் ஓங்கட்டும்!” என்று தெரிவித்துள்ளார்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள பதிவில், ஆங்கிலேயர்களின் படைபலத்தைக் கண்டு துளியளவும் பின்வாங்காமல், தாய்மண்ணைக் காக்கத் தொடர்ந்து முன்னேறிச் சென்று, பல வெற்றிகளைக் கண்டு, வீரத்தையும் விடுதலை உணர்வையும் மக்கள் மத்தியில் விதைத்த மாமன்னர் பூலித்தேவர் அவர்களின் தீரத்தையும் தியாகத்தையும் எந்நாளும் போற்றி வணங்குவோம்” என்று தெரிவித்துள்ளார்.

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள பதிவில், அடக்குமுறைக்கு தலைவணங்காமல், தன்னம்பிக்கையுடனும் துணிச்சலுடனும் போராடிய மாவீரர் பூலித்தேவரின் வாழ்க்கை, தமிழர் வரலாற்றில் அழியாத தடம் பதித்துள்ளது. அவரது தியாகமும் வீரமும் தலைமுறைகள் கடந்தும் நம் நினைவில் நிலைத்திருக்கட்டும். மாவீரர் பூலித்தேவர் அவர்களின் பிறந்த நாளில், அவரது வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குவோம். அவரது புகழும் வரலாறும் என்றும் நிலைத்திருக்கட்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

வீதி லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை கூறியிருப்பதாவது, “ஆங்கிலேயப் படைகளுக்கு எதிராகப் பல போர்களில் வெற்றி பெற்றவர். தமது மண்ணின் உரிமைக்காகவும், சுதந்திரத்திற்காகவும் சுமார் பத்து ஆண்டுகள் போரிட்டு இறுதி வரை தீரத்துடன் போராடியவர். வீரத்திற்கும், தியாகத்திற்கும் அடையாளமாகத் திகழும் மாவீரர் பூலித்தேவர் அவர்களின் புகழைப் போற்றி வணங்குகிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.