தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் இன்று முதல் தொடங்கப்படுகிறது.
தமிழகத்தில் ஏப்ரல் 6ல் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிமுக, திமுக தாங்கள் போட்டியிடும் தொகுதிகளை ஏறத்தாழ உறுதி செய்துள்ளன. மேலும், அதிமுக வேட்பாளர்கள் பட்டியலையும் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுவையில் இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று தொடங்கி வரும் 19ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடைபெறும் என்றும், காலை 11 மணி முதல் மாலை, 3 மணி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சனி, ஞாயிறு கிழமைகளில் வேட்புமனு தாக்கல் செய்ய இயலாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று போடி தொகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வேட்பு மனுத்தாக்கல் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.







