புதுச்சேரியில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக இன்று (நவ. 22) அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
குமரிக்கடல், தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, புதுச்சேரியில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக இன்று (22/11/23) புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து கல்வித்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார்.







