காரைக்கால் | பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை…

காரைக்கால் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக இன்று (நவ. 22) அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.   தொடர் கனமழை காரணமாக புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள காரைக்கால் இன்று புதன்கிழமை அரசு…

காரைக்கால் மாவட்டத்திற்கு உட்பட்ட திருநள்ளாறு, திருப்பட்டினம், அம்பகரத்தூர், கோட்டுச்சேரி, நெடுங்காடு உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக காரைகால் மாவட்டத்தில் இயங்கிவரும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.