புதுச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமி இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இதனையொட்டி, அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் தமிழக முதலமைச்சர் விஜய், தொலைபேசி வாயிலாக புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு வாழ்த்து தெரிவித்தார். இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று, புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பிறந்தநாளை முன்னிட்டு, அவரைத் தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு தனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




