நடிகர் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் மெகா பட்ஜெட் திரைப்படத்தை இயக்குநர் நெல்சன் இயக்குகிறார். ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் ப்ரோமோ வீடியோ ரஜினி மற்றும் கமலின் பிறந்த தேதிகளைக் குறிக்கும் வகையில் இன்று வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் ரஜினி- கமல் இணையும் புதிய படத்தின் ப்ரோமோ வீடியோ இன்று வெளியாகி உள்ளது. இந்த படத்தை இயக்குநர் நெல்சன் இயக்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். இந்த படத்திற்கு தற்காலிகமாக KHxRK என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
ப்ரோமோ வீடியோவில் ரஜினி, கமல், இயக்குநர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இது தொடர்பான ப்ரோமோ வீடியோ ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. 45 வருடங்களுக்கு பின் ரஜினி- கமல் இணைந்து நடிக்க உள்ளதால் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.







