மக்கள் சார்ந்த வளர்ச்சியே மாநில வளர்ச்சி கொள்கை குழுவின் கொள்கையாக இருக்க வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தியதாக அதன் துணைத் தலைவர் பேராசிரியர் ஜெயரஞ்சன் தெரிவித்துள்ளார்.
மாநில வளர்ச்சிக் குழுவின் துணை தலைவராக நியமிக்கப்பட்ட பேராசிரியர் ஜெயரஞ்சன் மற்றும் உறுப்பினர் டி.ஆர்.பி ராஜா ஆகியோர், தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பேராசிரியர் ஜெயரஞ்சன், அனைத்து உறுப்பினர்களும் முதலமைச்சரை சந்தித்த பின்னர், மாநில கொள்கை வகுப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுவின் பணி, மக்கள் சார்ந்த வளர்ச்சியாக இருக்கவேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.







