கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சியின் சார்பில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள பிரியங்கா காந்தி, ஒரு ஓட்டலுக்குள் சென்று தோசை சுட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
224 தொகுதிகள் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு வரும் மே மாதம் 10-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கர்நாடகாவில் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
காங்கிரஸ் கட்சியின் சார்பில் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி முழு வீச்சில் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று கர்நாடக மாநிலத்தில் பிரச்சாரம் செய்ய வந்த பிரியங்கா காந்தி திடீரென ஒரு ஹோட்டலுக்குள் சென்று அந்த ஓட்டலில் தோசை சுட்டார். இது குறித்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
Perfect dosas are just the beginning; with such skillful hands, there's no limit to the power they can bring to the world. pic.twitter.com/qsgUw6IBeJ
— Congress (@INCIndia) April 26, 2023
அவருடன் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் கர்நாடக பொது செயலாளர் பொறுப்பு வகிக்கும் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா மற்றும் கர்நாடக காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.கே.சிவக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.







