பிரியாமணி CBI அதிகாரியாக நடித்துள்ள DR 56 படத்தின் அப்டேட்

பிரியாமணி தனது திருமணத்திற்குப் பிறகு நடிக்கும் முதல் தமிழ் திரைப்படம் ” DR 56 ” படம் வருகிற டிசம்பர் 9 ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ராஜேஷ் ஆனந்த் லீலா இயக்கத்தில்…

பிரியாமணி தனது திருமணத்திற்குப் பிறகு நடிக்கும் முதல் தமிழ் திரைப்படம் ” DR 56 ” படம் வருகிற டிசம்பர் 9 ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

ராஜேஷ் ஆனந்த் லீலா இயக்கத்தில் பிரவீன் ரெட்டி திரைக்கதையில் நடிகை பிரியாமணி நடித்திருக்கும் திரைப்படம் டி.ஆர் 56. இத்திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் வெளியாகியுள்ள இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி ட்விட்டரில் வெளியிட்டிருந்தார்.

தேசிய விருது பெற்ற பிரபல நடிகை பிரியாணி இந்த படத்தின் நாயகியாக நடித்துள்ளார். மற்றும் பிரவீன், தீபக் ராஜ் ஷெட்டி, ரமேஷ் பட், யத்திராஜ், வீணா பொண்னப்பா, மஞ்சுநாத் ஹெக்டே, சுவாதி ஆகியோர் நடித்துள்ளனர். ஸ்ரீ லட்சுமி ஜோதி கிரியேஷன்ஸ் A.N. பாலாஜி இந்த படத்தின் அனைத்து உரிமைகளையும் வாங்கியிருக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் அவரே படத்தை வெளியிட இருக்கிறார்.

இந்நிலையில் படம் பற்றிப் பேசிய இயக்குநர் ராஜேஷ் ஆனந்த் லீலா, ‘இது அறிவியல் சார்ந்த கிரைம் திரில்லர். தற்போது சமூகத்தில் நிலவிவரும் உண்மைச் சம்பவங்களைக் கொண்டு திரைக்கதை அமைத்திருக்கிறோம். ப்ரியாமணி CBI அதிகாரியாக நடித்துள்ளார்.

இந்த கதையைச் சொல்லும்போதே ப்ரியாமணி மிகவும் பிரமிப்பானார். நேர்த்தியான CBI அதிகாரியாக நடிக்கத் தன்னை முற்றிலும் தயார்ப்படுத்திக் கொண்டார். படம் தமிழ், கன்னடத்தில் நேரடியாக எடுத்ததால் ஓரே காட்சிகளை மாற்றி மாற்றி எடுப்பதில் சவாலாக இருந்தது. என பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.