குழந்தைகள் கல்வி பயில ரூ.3 லட்சம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள்: நடிகர் சிவக்குமார் வேதனை!

தனியார் பள்ளிகளில் குழந்தைகள் கல்வி பயில ரூ. 3 லட்சம் கட்டணமாக வசூலிக்கப்படுவதாக நடிகர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் சூலூர் அடுத்த அரசூர் அரசு பள்ளியின் 60-வது ஆண்டு வைர விழாவில்  நடிகர்…

தனியார் பள்ளிகளில் குழந்தைகள் கல்வி பயில ரூ. 3 லட்சம் கட்டணமாக வசூலிக்கப்படுவதாக நடிகர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் சூலூர் அடுத்த அரசூர் அரசு பள்ளியின் 60-வது ஆண்டு வைர விழாவில்  நடிகர் சிவக்குமார் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

“அரசு பள்ளிகள் தற்போது அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளன. நாங்கள் படித்த காலத்தில் இது போன்ற வசதிகள் இல்லை. சின்ன குழந்தைகள் கல்வி பயில கட்டணமாக ரூ.3 லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது. தனியார் பள்ளிகளில் ப்ரீ கேஜி வகுப்பில் சேர்ப்பதற்கு கூட இரண்டரை லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நடிகர் கார்த்தி பையனை சேர்ப்பதற்கு கூட இத்தகைய கட்டணங்கள் செலுத்தப்பட்டுள்ளது.

திராவிட மொழியில் திருக்குறள் உள்ளது என முதலில் கண்டுபிடித்தவர்கள் ஆங்கிலேயர்கள் தான்.அதற்கு முன் திருக்குறள் குறித்து யாருக்கும் தெரியாமல் இருந்தது” என  சிவக்குமார் தெரிவித்தார். விழாவில் சூலூர் எம்எல்ஏ விபி கந்தசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.