“ப்ராஜெக்ட் கே” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக கமல்ஹாசன் அமெரிக்கா சென்றுள்ளார்.
ஜூலை 20 முதல் ஜூலை 23 வரை நடைபெற உள்ள சான் டியாகோ காமிக்-கான் புத்தக மாநாட்டில் தங்களின் அறிவியல் புனைகதை ஆக்ஷன் படமான “ப்ராஜெக்ட் கே” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக தெலுங்கு நட்சத்திரங்களான பிரபாஸ் மற்றும் ராணா டகுபதி நேற்று அமெரிக்கா சென்றனர்.
தேசிய விருது பெற்ற நாக் அஸ்வின் இயக்கும் இப்படத்தில் கமல்ஹாசன், அமிதாப் பச்சன், பிரபாஸ், ராணா டகுபதி, தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஒரே படத்தில் இவ்வளவு பெரிய நட்சத்திரங்கள் இருப்பதால் ரசிகர்களின் உற்சாகம் அதிகரித்துள்ளது.
https://twitter.com/magicfmtelugu/status/1681558579269206016?s=20
குறிப்பாக கமல்ஹாசன் இப்படத்தில் வில்லனாக நடிப்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. அவருக்கு மட்டும் ரூ.150 கோடி சம்பளம் வழங்கப்படுவதாக சினிமா வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.
இந்நிலையில் 21-ம் தேதி “ப்ராஜெக்ட் கே” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக கமல்ஹாசனும் தற்போது அமெரிக்கா சென்றுள்ளார். இதற்கான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.







