திறமையான இளைஞர்களை தனியார் நிறுவனங்கள் வேலை வழங்கி பயன்படுத்தி கொள்ள வேண்டும் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.
சென்னை CSI மெட்ரிக் பள்ளியில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோர் கலந்து கொண்டனர். வேலைவாய்ப்பு முகாமில் 62 நிறுவனங்கள் கலந்து கொண்டது. 2000 மாணவர்கள் பயன் பெரும்வகையில் வேலைவாய்ப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன், இறுதியாண்டு படிக்கும் கல்லூரி மாணவர்கள் ஆர்வத்துடன் வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்றுவருகின்றனர் என்றார். இந்த வேலை வாய்ப்பு முகாம், நன்றாக நடைபெற்று வருகிறது என கூறினார். கருணாநிதியின் பிறந்தநாளின்போது, முன்பு இதே போல வேலை வாய்ப்பு முகாமை அமைத்துள்ளோம். தற்போது, அதுபோன்ற முகாம் நடைபெறுவது மிகவும் சந்தோஷமாக உள்ளது.
நமது அரசு ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் மூலம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுத்து வருகிறோம். சில நிறுவனங்கள் கடமைக்கு என்றே வரக்கூடாது. இங்கு திறமையான இளைஞர்கள் உள்ளனர். அவர்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும். ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் அதிக அளவு வேலை வாய்ப்பு அமைத்து கொடுத்தது திமுக தான் என தா.மோ. அன்பரசன் தெரிவித்தார்.
– இரா.நம்பிராஜன்








