முக்கியச் செய்திகள் இந்தியா

காங்கிரசில் மேலும் ஒரு முக்கிய தலைவர் அதிருப்தி- வழிகாட்டுதல் குழுவிலிருந்து விலகல்

இமாச்சல் பிரதேச காங்கிரசின் வழிகாட்டுதல் குழு தலைவர் பொறுப்பிலிருந்து முன்னாள் மத்திய அமைச்சர் ஆனந்த் சர்மா விலகியுள்ளார். கட்சியில் தனக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என சோனியாகாந்திக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட பின் அம்மாநில சட்டப்பேரவைக்கு முதல் முறையாக விரைவில் தேர்தல் நடத்தப்பட உள்ளது. தொகுதி மறுவரையரை பணிகள் நிறைவடைந்த உடன் அம் மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த தேர்தலை எதிர்கொள்ள தீவிரமாக தயாராகி வரும் காங்கிரஸ் கட்சி, அதற்காக மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான குலாம் நபி ஆசாத் தலைமையில் பிரச்சாரக்குழுவை அமைத்தது. இந்நிலையில் பிரச்சாரக்குழு தலைவர் பதவியிலிருந்து சமீபத்தில் குலாம்நபி ஆசாத் ராஜினாமா செய்தார். காங்கிரஸ் கட்சியின் அதிகாரம் மிக்க ஜி23 தலைவர்களில் ஒருவராக கருதப்படும் குலாம் நபி ஆசாத் பிரச்சாரக் குழு தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தது அக் கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் உள்ள மற்றொரு ஜி23 தலைவரான ஆனந்த சர்மா, இமாச்சல் பிரதேச காங்கிரசின் வழிகாட்டுதல் குழு தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.  கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியாகாந்திக்கு ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ள ஆனந்த் சர்மா,  காங்கிரசில் தமக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். கட்சியின் எந்த ஒரு கூட்டம் குறித்தும் தமக்கு தகவல் தெரிவிக்கப்படுவதில்லை என்றும், தாம் கூட்டத்திற்கு அழைக்கப்படுவதில்லை என்றும் ஆனந்த் சர்மா தனது கடிதத்தில் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். எனினும் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்காக பிரச்சாரம் செய்வேன் என்றும் அவர் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

இமாச்சல் பிரதேசத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அம்மாநில காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவராக விளங்கும் ஆனந்த் சர்மா வழிகாட்டுதல் குழு தலைவர் பதவியிலிருந்து விலகியிருப்பது அக்கட்சியில்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டப்பேரவை தேர்தல் நேரத்தில் ஆனந்த் சர்மாவின் இந்த நடவடிக்கை காங்கிரஸ் கட்சிக்கு ஒரு பின்னடைவாகக் கருதப்படுகிறது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

புதுச்சேரியில் சர்ச்சையை ஏற்படுத்திய விடுமுறை ரத்து..

G SaravanaKumar

“காலா”, “அசுரன்” திரைப்படங்களில் நடித்த, நித்திஷ் வீரா கொரோனாவுக்கு பலி!

Vandhana

அக்னிபாத் திட்டத்தில் பயற்சி பெற்றவர்களுக்கு வேலை: ஆனந்த் மகிந்திரா அறிவிப்பு

Web Editor