35.7 C
Chennai
April 19, 2024
முக்கியச் செய்திகள் சினிமா

பிரின்ஸ் படம் சிவகார்த்திகேயனுக்கு கை கொடுக்குமா ? -விமர்சனம்

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் படம் இன்று வெளியாகியுள்ளது. தன்னுடைய வழக்கமான காமெடி பாணியை கையில் எடுத்துள்ள சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் அவருக்கு கை கொடுத்ததா என்பதை பார்க்கலாம்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் அனுதூப் இயக்கத்தில் திரையரங்கில் வெளியான திரைப்படம் பிரின்ஸ். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நடிகை மரியா நடித்துள்ளார். இவர்களுடன் சத்யராஜ், பிரேம்ஜி, ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நடிகர் சூரி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பள்ளி ஆசிரியராக அன்பு (சிவகார்த்திகேயன்) ஜாலியாக அனைவரையும் கிண்டல் செய்யும் ஒருவராக சுற்றி வருவார். தனது தந்தை ( சத்யராஜ் ) ஆணைக்கு இணங்க சாதி, மதம் கடந்து ஒரு பெண்ணை காதலிக்க முயற்சி செய்வார். அவரது பள்ளியில் ஆசிரியராக சேரும் இங்கிலாந்து பெண் ஜெசிகாவை ( மரியா ) காதலிப்பார். அன்புவின் தந்தையும், அந்த ஊர் மக்களும் தேச பக்தியை காரணம் காட்சி அவர்களின் காதலை பிரிக்க முயற்சி செய்வார்கள். இவர்களின் எதிர்ப்பை மீறி அன்புவின் காதல் கை கூடியதா இல்லையா என்பது தான் பிரின்ஸ் படத்தின் கதை.

சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் இங்கிலாந்து பெண்ணை காதலிக்கும் தமிழ் நாட்டு பையன் அவர்களின் காதல் ஒன்று சேர்ந்ததா இல்லையா என்பது தான் பிரின்ஸ் படத்தின் கதை. நகைச்சுவை கலந்த காதல் கதையை கொடுக்க இயக்குனர் அனுதீப் முயற்சி செய்துள்ளார். அந்த முயற்சி ஓரளவுக்கு சாத்தியமாகி உள்ளது.

தன்னுடைய வழக்கமான காமெடி பாணியை இந்த படத்தில் கையில் எடுத்துள்ளார் சிவகார்த்திகேயன். காதல் காட்சிகள், ஆக்ஷன், ரொமான்ஸ் என தன்னுடைய சிறப்பான இயல்பான நடிப்பை சிவகார்த்திகேயன் வெளிப்படுத்தி உள்ளார். நகைச்சுவை காட்சிகள் சில நேரங்களில் கை கொடுத்தாலும் பெரும்பாலான இடங்களில் திணிக்கப்பட்டது போலவே இருந்தது.

உக்ரைன் நடிகை மரியா தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிகவும் சிறப்பாக செய்துள்ளார். ஆங்கிலம் கலந்த தமிழுடன் அவர் பேசும் வசனங்கள் ரசிக்க வைக்கிறது. தந்தையாக நடித்துள்ள சத்யராஜ் நடிப்பை பற்றி சொல்ல வேண்டியதில்லை அவ்வளவு சிறப்பாக கச்சிதமாக அந்த கதாபாத்திரமாகவே மாறியுள்ளார் சத்யராஜ். வித்தியாசமான ஒரு கதாபாத்திரத்தில் பிரேம்ஜி நடித்துள்ளார். காட்சிக்கு காட்சி வித்தியாசமான நடிப்பை பிரேம்ஜிவெளிப்படுத்தி இதுவரை பார்த்திராத ஒரு பிரேம்ஜி இந்த படத்தில் உருமாறியுள்ளார்.

ஜாலியான நகைச்சுவை கலந்த காதல் படத்துக்கு ஏற்ப இசையை கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் தமன். பின்னணி இசை மட்டுமல்ல, ஜெஸ்ஸிக்கா ஜெஸ்ஸிக்கா, பிம்மிலிக்கா பிலாப்பி பாடல்கள் அனைவரையும் ரசிக்க செய்துள்ளது. மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு காட்சிக்கு காட்சி ரசிக்க செய்துள்ளது. மொத்தத்தில் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் திரையரங்கு சென்று பார்க்கும் படமாக பிரின்ஸ் உருவாகியுள்ளது.

-தினேஷ் உதய்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading