ஜெர்மனியின் முனிச் நகரில் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி பேசியதின் சில தகவல்களின் உண்மை தன்மையை அறிய வேண்டும் என முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.
ஜி7 மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜெர்மனி சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, முனிச் நகரில் இந்தியர்கள் மத்தியில் நேற்று (ஜூன் 26) உரை நிகழ்த்தினார். அப்போது, நாம் நமது ஜனநாயகத்தை என்னி தற்போது பெருமைப்பட முடியும் என்றும், ஜனநாயகத்தின் தாயாக இந்தியா திகழ்ந்து கொண்டிருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கலாச்சாரம், உணவு, உடை, இசை, பழக்க வழக்கங்கள் எனும் பன்முகத்தன்மை, இந்திய ஜனநாயகத்தை துடிப்ப மிக்கதாக ஆக்கி வருவதாகக் குறிப்பிட்ட பிரதமர், ஜனநாயகம் பலன் தரும் என்பதையும் தந்து கொண்டிருக்கிறது என்பதையும் இந்தியா உலகிற்கு நிரூபித்து வருவதாகக் கூறினார்.
தற்போது நமது நாட்டில் யாரும் திறந்தவெளியில் மலம் கழிப்பதில்லை என்றும், 99 சதவீத கிாமங்களில் மின்சாரம் உள்ளது என்றும், 99 சதவீத மக்கள் எரிவாயு அடுப்புகளை பயன்படுத்துகிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த 2 ஆண்டுகளாக இந்தியா, 80 கோடி ஏழை மக்களுக்கு இலவசமக உணவுப் பொருட்களை வழங்கி வருகிறது என குறிப்பிட்ட பிரதமர், இந்தியாவில் ஒவ்வொரு 10 நாட்களிலும் ஒரு யூனிகான் நிறுவனம் (சுமார் ரூ. 7,800 கோடி மதிப்புகொண்டது) உருவாகி வருவதாகவும் தெரிவித்தார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது இந்தியாவில் அரசின் கொள்கைகளை சார்ந்தது அல்ல என்று தெரிவித்த பிரதமர், இந்திய மக்கள் ஒவ்வொருவரும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கையை வாழ்பவர்கள் என கூறினார்.
Please fact-check the following statements by PM in Munich:
1. Every village is Open Defecation Free
2. Roads and electricity have reached all villages
— P. Chidambaram (@PChidambaram_IN) June 26, 2022
தற்போது நாட்டில் 10 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டுவிட்டது என்றும், இனி சுத்தத்தை பேணிக் காப்பது தங்கள் பொறுப்பு என்பதை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள் என்றும் நரேந்திர மோடி தெரிவித்தார்.
இந்நிலையில் பிரதமரின் “நமது நாட்டில் யாரும் திறந்தவெளியில் மலம் கழிப்பதில்லை, 99 சதவீத கிாமங்களில் மின்சாரம் உள்ளது” உரையை மேற்கோள் காட்டி இந்த உரையின் உண்மை தன்மையை (fact-check) அறிய வேண்டும் என ப.சிதம்பரம் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
சர்வதேச நாடுகளின் தலைவர்கள் முன்னிலையில் உரையாற்றி பிரதமரின் கூற்றுக்கு முன்னாள் அமைச்சர் fact-check கோரியிருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.