தமிழ்நாட்டிலிருந்து கேரளாவுக்கு கொண்டு செல்லப்பட்ட 10,750 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்
தமிழ்நாட்டிலிருந்து கேரளாவுக்கு கொண்டு செல்லப்பட்ட கெட்டுப்போன மீன்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தமிழக – கேரள எல்லையான தென்காசி மாவட்ட எல்லை அருகே உள்ள கேரள மாநில ஆரியங்காவு சோதனை சாவடி உள்ளது. இந்த சோதனை சாவடியில் வழக்கம்போல் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு கொண்டு செல்லப்படும் அனைத்து உணவுப் பொருட்களையும் சோதனை செய்வது வழக்கம்.
இந்நிலையில் தமிழகத்தில் இருந்து மீன்கள் கொண்டு செல்லப்பட்ட லாரிகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். சோதனையில் 3 லாரிகளில் 10,750 கிலோ கெட்டுப்போன மீன்கள் கொண்டு செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இந்த மீன்கள் தமிழகத்தின் கடலூரில் இருந்து கருநாகப்பள்ளி, ஆலங்கோடு ஆகிய பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டது என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.