உலகத் தலைவர்களின் வாராந்திர மதிப்பீட்டில் பிரதமா் நரேந்திர மோடி இந்த வாரம் முதலிடம் வகிக்கிறார்.
மக்களால் தோவு செய்யப்பட்ட தலைவர்களின் புகழ், செயல்பாடு மதிப்பீட்டை வாராந்திர அடிப்படையில் கணக்கிட்டு ‘மாானிங் கன்சல்ட் அமைப்பு வெளியிட்டு வருகிறது.
ஜி20-உச்சி மாநாடு தில்லியில் வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில், கடந்த வாரம் நடத்தப்பட்ட ஆய்வில், 76 சதவீத மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவராக பிரதமா் மோடி முதலிடத்தில் உள்ளார். .
இதனையடுத்து பிரதமா் நரேந்திர மோடியின் தலைமைக்கு பாஜக தலைவர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனா.
மத்திய உள்துறை அமைச்சர் விடுத்துள்ள எக்ஸ் பதிவில், இது பிரதமர் மோடிக்கு கிடைத்த அங்கீகாரம் எனவும், வெளியுறவு கொள்கைகளில் பிரதமா் மோடியின் கோட்டுபாடுகளுக்கு கிடைத்த வெற்றிக்கான சான்று மட்டுமல்ல. நாட்டில் லட்சக்கணக்கான மக்களை வறுமையிலிருந்து மீட்டெடுத்து, அவா்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்திய பிரதமரின் சாதனை என தெரிவித்துள்ளார்.
ஒடுக்கப்பட்டவர்களுக்கு அதிகாரம் அளிப்பதிலும், தனி மனிதர்களின் விதியை மாற்றியமைப்பதிலும் மோடி குறிப்பிடத்தக்க பங்காற்றி வருவதாக கூறியுள்ள மத்திய அமைச்சர் சோபா கரண்டலே, அவர் உலக அளவில் நம்பிக்கை மற்றும் தலைமையின் இணையற்ற சின்னமாக தனித்து நிற்கிறார் என்றும் கூறியுள்ளார்.




