தமிழ்நாட்டிற்கு மீண்டும் நாளை வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடி!

கட்ந்ந்த மூன்று மாதங்களில் திருச்சி, சென்னை, பல்லடம், ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி என பல்வேறு பகுதிகளுக்கு வருகை தந்த பிரதமர் மோடி ஐந்தாவது முறையாக நாளை தேர்தல் பிரச்சாரத்திற்கு கன்னியாகுமரி வருகிறார். டெல்லியில் இருந்து…

கட்ந்ந்த மூன்று மாதங்களில் திருச்சி, சென்னை, பல்லடம், ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி என பல்வேறு பகுதிகளுக்கு வருகை தந்த பிரதமர் மோடி ஐந்தாவது முறையாக நாளை தேர்தல் பிரச்சாரத்திற்கு கன்னியாகுமரி வருகிறார்.

டெல்லியில் இருந்து திருவனந்தபுரம் வரும் பிரதமர் மோடியை,  விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்,  தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் வரவேற்கின்றனர்.  அங்கிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் காலை 11 மணிக்கு கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகைக்கு பிரதமர் செல்கிறார்.

அதன் பின்னர் சாலை மார்க்கமாக அகஸ்தீஸ்வரம் ஏழுசாத்துபட்டு பகுதியில் அமைந்துள்ள கல்லூரி மைதானத்தில் நடைபெறும் பாஜக பரப்புரை பொதுக் கூட்டத்தில்பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.

இந்த பொதுக்கூட்டத்தில்,  பாஜகவுடன் கூட்டணியை இறுதி செய்துள்ள ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன்,  ஜான் பாண்டியன் உள்ளிட்டோரும்,  பாரதிய ஜனதாவுடன் தனது சமத்துவ மக்கள் கட்சியை இணைத்த சரத்குமாரும் கலந்து கொள்கின்றனர்.

நண்பகல் 12.15 மணி வரை பொதுக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றும் பிரதமர் மோடி, அதன் பின் மீண்டும் ஹெலிகாப்டரில் புறப்பட்டு,  கேரள மாநிலம் பத்தனம்திட்டா பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு செல்கிறார்.  மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில், நடப்பாண்டு ஐந்தாவது முறையாக பிரதமர் மோடி நாளை தமிழ்நாடு வருகிறார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.