பிறந்த நாள் கொண்டாடிய லோகேஷ்… முதலில் வாழ்த்து சொன்னது யார் தெரியுமா?

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது பிறந்த நாளை இன்று கொண்டாடினார்.  மாநகரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ்.  பின்னர் கைதி,  மாஸ்டர்,  விக்ரம் போன்ற ஹிட் படங்களை இயக்கியுள்ளார்.  மேலும் சமீபத்தில்…

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது பிறந்த நாளை இன்று கொண்டாடினார். 

மாநகரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ்.  பின்னர் கைதி,  மாஸ்டர்,  விக்ரம் போன்ற ஹிட் படங்களை இயக்கியுள்ளார்.  மேலும் சமீபத்தில் லோகேஷ் இயக்கத்தில் வெளி வந்த விஜய்யின் லியோவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து ரஜினிகாந்தின் 171 வது படத்தை லோகேஷ் இயக்குகிறார்.  அதற்கான வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் லோகேஷ் தனது 38வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். அவருக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.  அந்த வரிசையில் லியோ வசனகர்த்தாவும்,  இயக்குநருமான ரத்னகுமார் தனது எக்ஸ் பதிவில் லோகேஷ் கனகராஜுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.  அந்த பதிவில் உள்ள கேக்கில் எல்சியூ, டிசி என எழுதப்பட்டுள்ளது.  உடன் துப்பாக்கி வடிவமும் பொறிக்கப்பட்டுள்ளது.  டிசி திரைப்படங்கள் லோகேஷுக்கு மிகவும் பிடித்தமானது.  எல்சியூ அவர் உருவாக்கியுள்ள சினிமாட்டிக் யுனிவர்ஸ்.  இதன் மூலம் லோகேஷின் குறும்படம் வருமென எதிர்பார்க்கப்படுகிறது.

https://twitter.com/MrRathna/status/1767983851949662241

பழைய விக்ரம் படத்தின் கனெக்ட்,  அந்த படத்தையும் கைதி படத்தின் கதாபாத்திரத்தின் கதைக்களத்தை மற்றும் கதாபாத்திரங்களை வைத்து ஒரு யூனிவர்ஸ் உருவாக்கியது, ட்ரெண்ட் செட்டாக அமைந்தது.  இதன் பின்பு ரசிகர்கள் அந்த முயற்சியை எல்.சி.யு (லோகேஷ் சினிமெட்டிக் யூனிவர்ஸ்) என அழைத்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.