மும்பையில் நாளை சுரங்க மெட்ரோ சேவையை தொடங்கி வைக்கிறார் #NarendraModi!

மும்பையில் சுரங்க மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி நாளை(அக். 5) கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார். மும்பை மெட்ரோ நிர்வாகம் சார்பில், கஃபே பரேடில் இருந்து ஆரே வரை மூன்று கட்டங்களாக மெட்ரோ…

மும்பையில் சுரங்க மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி நாளை(அக். 5) கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார்.

மும்பை மெட்ரோ நிர்வாகம் சார்பில், கஃபே பரேடில் இருந்து ஆரே வரை மூன்று கட்டங்களாக மெட்ரோ பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் முதல்கட்ட மெட்ரோ வழித்தடத்தில் (ஆரே முதல் பிகேசி) பணிகள் நிறைவடைந்துள்ளது.

இந்த நிலையில், தசராவை முன்னிட்டு ரூ.14.120 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் – ஆரே ஜேவிஎல்ஆர் பிரிவு இடையே நகரின் முதல் சுரங்க மெட்ரோ ரயில் சேவையை மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி நாளை கொடியசைத்துத் தொடங்கிவைக்கிறார். தொடர்ந்து ரயிலில் பயணம் செய்ய உள்ளார். திங்கள்கிழமை முதல் ரயில் சேவைகள் தொடங்க உள்ளது.

காலை 6.30 மணி முதல் இரவு 10.30 மணி வரையிலும், நெரிசல் நேரங்களில் சுமார் ஆறு நிமிட இடைவெளியிலும், நெரிசல் இல்லாத நேரத்தில் 15-20 நிமிட இடைவெளியிலும், ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8.30 மணி முதல் இரவு 10.30 வரை சேவைகள் இயக்கப்படும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.