சென்னை ஐஐடியில் மூளை ஆராய்ச்சி மையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

சென்னை ஐஐடி யில் புதிதாக அமைக்கப்பட்ட மூளை ஆராய்ச்சி மையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ உள்ளிட்ட கட்டி முடிக்கப்பட்ட ரூ.13,000 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைக்கவும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்தடைந்தார். டெல்லியில் இருந்து தனி விமானத்தில் காலை 11 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடியை, முதலமைச்சர் விஜய் விமான நிலையத்திற்கே சென்று மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றார். தொடர்ந்து போரூர் புறப்பட்ட பிரதமர் மோடிக்கு வழியெங்கும் தொண்டர்கள் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரதமர் மோடி தொண்டர்களைப் பார்த்துக் கையசைத்தபடி சென்றார்.

இதனையடுத்து ரூ.750 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட, 14.6 கி.மீ. நீளம் கொண்ட பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ மஞ்சள் நிற வழித்தடத்தைப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதலமைச்சர் விஜய் ஆகியோர் இணைந்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்காகக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர். பின்னர் இருவரும் டிக்கெட் கவுன்டரில் டிக்கெட் எடுத்து போரூர் முதல் பூந்தமல்லி வரை மெட்ரோவில் பயணித்தனர்.

இதனைத்தொடர்ந்து சென்னை ஐஐடி யில் புதிதாக கட்டப்பட்ட மூளை ஆராய்ச்சி மையத்தை திறந்துவைப்பதற்காக பிரதமர் மோடி கிண்டியில் உள்ள ஐஐடி நோக்கி சென்றார். அப்போது வழியெங்கும் தொண்டர்கள் கூடியிருந்து பிரதமர் மோடிக்கு மலர் தூவி உற்சாக வரவேற்பு அளுத்தனர்.

ஐஐடி வந்தடைந்த பிரதமர் மோடி ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோயிலில் வழிபாடு செய்தார். தொடர்ந்து ஐஐடி-ல் புதிதாக கட்டப்பட்டுள்ள சுதா கோபாலகிருஷ்ணன் மூளை ஆராய்ச்சி மையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். பின்னர் ஆராய்ச்சி மையம் குறித்து ஆய்வாளர்களிடம் கேட்டெறிந்தார்.

இந்த மூளை ஆராய்ச்சி மையத்தில் மனித மூளையின் கட்டமைப்பு, செயல்பாடுகளை நுண்ணிய அளவில் வரைபடமாக தயாாிக்கப்படும். நரம்பியல், பொறியியல் துறைகளை இணைத்து மூளையின் செயல்பாடுகளை 3D-யில் சேகாிப்பதும் இந்த மையத்தின் சிறப்பம்சமாகும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.