முக்கியச் செய்திகள் உலகம்

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே நினைவு நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பு

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே நினைவு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

ஜப்பான் நாட்டில் நீண்ட காலம் பிரதமர் பதவி வகித்தவர் ஷின்சோ அபே (வயது 67). அங்கு நரா என்ற இடத்தில் கடந்த ஜூலை மாதம் 8-ந்தேதி நடந்த தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் டெட்சுய யமகாமி என்பவரால் சுட்டு கொல்லப்பட்டார். ஷின்சோ அபேயின் இறுதிச்சடங்கு 12-ந்தேதி டோக்கியோவில் நடந்தது. அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த நிலையில் ஷின்சோ அபே நினைவு நிகழ்ச்சி, அந்த நாட்டின் அரசு சார்பில் இன்று டோக்கியோவில் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்க இந்தியா உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடப்பட்ருந்தது.

ஜப்பானின் அழைப்பை ஏற்று, ஷின்சோ அபே நினைவு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி, நேற்று டெல்லியில் இருந்து விமானம் மூலம் ஜப்பான் நகர் டோக்கியோவிற்கு சென்றார். ஜப்பான் சென்றடைந்த பிரதமர் மோடியை ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடா முறைப்படி வரவேற்றார். இதனை தொடர்ந்து இருநாட்டு தலைவர்களின் இருதரப்பு சந்திப்பு நடந்தது.

இதுபற்றி பிரதமர் மோடி கூறும்போது, துயரம் நிறைந்த இந்த நேரத்தில் எங்களது இன்றைய சந்திப்பு நடைபெறுகிறது. கடந்த முறை நான் ஜப்பான் நாட்டிற்கு வந்தபோது, முன்னாள் ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபேவுடன் நீண்டநேரம் உரையாடினேன். அவரை இந்தியா இழந்துள்ளது. அவரையும், ஜப்பானையும் நாங்கள் நினைவு கூர்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அடுத்த 6 மணி நேரத்திற்கு மழை தொடரும்

Halley Karthik

ஏற்றுக்கொள்ளக் கூடிய விலையில் சிமெண்ட் கிடைப்பதை உறுதி செய்ய நடவடிக்கை: தயாரிப்பாளர்கள் உறுதி

Halley Karthik

’இது கஷ்டமான காலம்தான், அதே நேரத்தில் கடக்க முடியாத காலம் அல்ல’: தமிழக முதல்வர்

Halley Karthik