ஆவின் போன்ற அத்தியாவசிய பொருட்கள் விலையை திடீரென்று ஏற்றக்கூடாது –  கமல்ஹாசன்

ஆவின் போன்ற எந்த அத்தியாவசிய பொருள்களையும் திடீரென்று விலை ஏற்றக்கூடாது என்று நீதி மையம் தலைவர்  கமல்ஹாசன் தெரிவித்தார். சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் விடுதியில் மக்கள் நீதி மையம் மாநில நிர்வாக குழு செயற்குழு மாவட்ட செயலாளர்…

ஆவின் போன்ற எந்த அத்தியாவசிய பொருள்களையும் திடீரென்று விலை ஏற்றக்கூடாது என்று நீதி மையம் தலைவர்  கமல்ஹாசன் தெரிவித்தார்.

சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் விடுதியில் மக்கள் நீதி மையம் மாநில நிர்வாக குழு செயற்குழு மாவட்ட செயலாளர் அவர்கள் ஆலோசனை கூட்டம் மக்கள் நீதி மையத் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டவர்கள் மட்டும் பங்கேற்க வேண்டும் என்று தெரிவித்த நிலையில் அவர்களுடனான ஆலோசனையானது நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன்,  இந்தக் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது, 2024
தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் கட்டமைப்பு குறித்து ஆலோசனையானது நடத்தப்பட்டது என்றார்.

மேலும், ஒரு முக்கிய பயணத்திற்கான முன்னேற்பாடுக்கான திட்டத்தை எடுத்துள்ளோம்.
கூட்டத்தில் கூட்டணி குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. நாங்கள் எந்த திசையை நோக்கி நகர்கிறோம் என்பது விரைவில் புரியவரும் எங்கள் பயணத்தை நீங்கள் புரிந்து கொண்டாலே அது வெகுவிரைவில் உங்களுக்கு புரியும் எனவும் அவர் பேசினர்.

பின், ஆவின் பொருட்கள் விலை குறித்த கேள்விக்கு? எந்த அத்யாவசிய பொருள்களையும் அப்படி திடீரென்று விலை ஏற்றக்கூடாது என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.