ஜோ பைடன் முதல் கையெழுத்து: ட்ரம்பின் முக்கிய முடிவுகள் அதிரடி நீக்கம்!

உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து விலகுவது உள்ளிட்ட ட்ரம்ப் அரசு எடுத்த முக்கிய முடிவுகளை ரத்து செய்தார் ஜோ பைடன். அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுக்கொண்ட ஜோ பைடன் அடுத்த சில மணி நேரங்களில் முதல்…

உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து விலகுவது உள்ளிட்ட ட்ரம்ப் அரசு எடுத்த முக்கிய முடிவுகளை ரத்து செய்தார் ஜோ பைடன்.

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுக்கொண்ட ஜோ பைடன் அடுத்த சில மணி நேரங்களில் முதல் கையெழுத்தாக 17 நிர்வாக ரீதியான உத்தரவுகளை பிறப்பித்தார். இவற்றில் பெரும்பாலானவை ட்ரம்பின் நிர்வாக முடிவுகளை நீக்கும் விதமாக அமைந்துள்ளது. சமீபத்தில் சில இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்கா செல்வதற்கு ட்ரம்ப் விதித்த தடையை பைடன் நீக்கினார்.

பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து டிரம்ப் தலைமையிலான அரசு விலகிய நிலையில், 30 நாட்களில் மீண்டும் இணையும் முடிவில் கையெழுத்திட்டார். அமெரிக்கா-மெக்சிகன் சுவர் கட்டும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதற்கு நிதி வழங்குவதற்காக ட்ரம்ப் பிறப்பித்த அவசரகால உத்தரவு நீக்கப்பட்டது.

இதுபோலவே, உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து வெளியேறுவது நிறுத்திவைப்பு, சூழலியலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்த சர்ச்சைக்குரிய கீஸ்டோன் எக்ஸ் எல் குழாய் அமைக்கும் திட்டம் ரத்து, புலம்பெயர்ந்தவர்களை கணக்கிடுவதற்கான தடை நீக்கம், அவர்களின் குழந்தைகளுக்கு பாதுகாப்பு ஆகிய உத்தரவுகளை பிறப்பித்தார்.

முகக் கவசம் கட்டாயமாக அணிய உத்தரவிட முடியாது என ட்ரம்ப் முன்பு தெரிவித்த நிலையில், 100 நாட்கள் முகக்கவசம், தனி மனித இடைவெளி கட்டாயம் என அறிவித்துள்ளார் பைடன். நிறம், இனம், பாலின தீண்டாமையை தடுக்கும் விதமாக அனைவருக்கும் சம உரிமை வழங்குவதற்கான சட்டம் இயற்றப்பட்டது. கொரோனாவை தடுப்பு நடவடிக்கைக்கு புதிய ஒருங்கிணைப்பு அதிகாரியையும் நியமித்துள்ளார் ஜோ பைடேன்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply