குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள் – மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இன்று தனது 68-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, துணை குடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், அரசியல் பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

எளிய தொடக்கத்திலிருந்து இந்தியாவின் குடியரசுத் தலைவர் ஆனது வரையிலான உங்கள் பயணம், நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு ஒரு உத்வேகமாக விளங்குகிறது. உங்கள் பொது வாழ்க்கை பணிவு, விடாமுயற்சி மற்றும் அமைதியான வலிமையால் நிறைந்துள்ளது. உங்களுக்கு நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் நீண்ட ஆயுள் கிடைக்க வாழ்த்துகிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.