இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு 5 நாள் பயணமாக மத்திய பிரதேசம் சென்றுள்ளார். டெல்லியில் இருந்து இந்தூர் சென்ற அவரை மத்தியப் பிரதேச ஆளுநர் மங்கு பாய் படேல் மற்றும் முதலமைச்சர் மோகன் யாதவ் ஆகியோர் வரவேற்றனர்.
குடியர்சு தலைவரின் பயணத்திட்டத்தின் படி, அவர் இன்று போதுல் நகரில் உள்ள தனியார் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார். அதன் பின்னர் மாலை புகழ்பெற்ற ஓம்காரேஷ்வர் மற்றும் மாமலேஷ்வர் கோயில்களில் சாமி தரிசனம் செய்கிறார்.
தொடர்ந்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, 21-ம் தேதி நடைபெறும் சர்வதேச யோகா தின நிகழ்ச்சியிலும், ராணி குர்காவதி பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவிலும் கலந்துகொள்கிறார். அடுத்ததாக அவர் 22-ந்தேதி குனோ தேசியப் பூங்காவைப் பார்வையிடுகிறார்.




