குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்ட திரெளபதி முர்மு

குடியரசுத் தலைவராக பதவி ஏற்றுக்கொண்ட குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, குடியரசுத் தலைவர் மாளிகைக்குச் சென்று குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார். குடியரசுத் தலைவர் பதவியேற்புக்குப் பிறகு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, தனது அலுவலகமான…

குடியரசுத் தலைவராக பதவி ஏற்றுக்கொண்ட குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, குடியரசுத் தலைவர் மாளிகைக்குச் சென்று குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

குடியரசுத் தலைவர் பதவியேற்புக்குப் பிறகு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, தனது அலுவலகமான குடியரசுத் தலைவர் மாளிகைக்குச் சென்றார்.

அங்கு அவரை வரவேற்ற ராம்நாத் கோவிந்த், திரெளபதி முர்முவை அவரசது இருக்கைக்கு அழைத்துச் சென்று அமர வைத்தார். குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு இருக்கையில் அமர்ந்ததும், அவருக்கு அருகில் ராம்நாத் கோவிந்த் நின்றார்.

அப்போது, குடியரசுத் தலைவர் மாளிகையில் வழங்கப்பட்ட கோப்பில் கையொப்பமிட்டு திரெளபதி முர்மு பொறுப்பேற்றுக்கொண்டார்.

இதையடுத்து இருவரும் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வெளியே வந்தனர். அப்போது, முப்படைகள் சார்பில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

அணிவகுப்பு மரியாதையை திரெளபதி முர்மு ஏற்றுக்கொள்ள, ராம்நாத் கோவிந்த் அருகில் நின்றார்.

இதையடுத்து, குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

முன்னாள் குடியரசுத் தலைவரான ராம்நாத் கோவிந்த், குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து டெல்லியில் ஜன்பத் சாலையில் ஒதுக்கப்பட்ட அரசு பங்களாவிற்கு புறப்பட்டுச் சென்றார்.

முன்னதாக, அவருக்கு முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு அவர் தான் 5 ஆண்டுகளாக அமர்ந்து ஆட்சி செய்த குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.

இந்தியாவின் மிக உயரிய பதவியான குடியரசுத் தலைவர் பதவிக்கான மாற்றம் ஜனநாயக முறைப்படி நடந்து முடிந்தது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.