நடிகை பிரீத்தி ஜிந்தாவுக்கு வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தை

பிரபல இந்தி நடிகை பிரீத்தி ஜிந்தா, வாடகை தாய் மூலம் இரட்டைக் குழந்தைகளை பெற்றுள்ளார். பிரபல இந்தி நடிகை பிரீத்தி ஜிந்தா. இந்தியில் முன்னணி ஹீரோ படங்களில் நடித்துள்ள இவர், தமிழில் மணிரத்னம் இயக்கிய…

பிரபல இந்தி நடிகை பிரீத்தி ஜிந்தா, வாடகை தாய் மூலம் இரட்டைக் குழந்தைகளை பெற்றுள்ளார்.

பிரபல இந்தி நடிகை பிரீத்தி ஜிந்தா. இந்தியில் முன்னணி ஹீரோ படங்களில் நடித்துள்ள இவர், தமிழில் மணிரத்னம் இயக்கிய உயிரே படத்தில் நடித்திருந்தார். ஐபில் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியின் உரிமையாளரான இவர், அமெரிக்காவைச் சேர்ந்த தனது நீண்ட நாள் காதலர், ஜெனி குட்எனகை (Gene Goodenough) கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் வாடகை தாய் மூலம் இரட்டைக் குழந்தை களை இவர்கள் பெற்றுள்ளனர்.

இதை இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ள பிரீத்தி ஜிந்தா, நாங்கள் எங்கள் குடும்பத்தில், இரட்டையர்களான ஜெய் ஜிந்தா குட்எனஃப் மற்றும் கியா ஜிந்தா குட்எனஃப் ஆகியோர் புதிதாக இணைந்துள்ளனர். இவர்களின் வரவால் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறோம். இதற்காக டாக்டர்கள் மற்றும் வாடகைத் தாய்க்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் எனக் கூறியுள்ளார்.

இதையடுத்து திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.