உணவில் கிடந்த கரப்பான் பூச்சி? பிரபல உணவகத்தில் அதிகாரிகள் அதிரடி!

சென்னை தியாகராயர் நகரில் உள்ள பிரபல தனியார் உணவகமான ஹாட் சிப்ஸ்-ல் கரப்பான் பூச்சி இருந்த உணவை சாப்பிட்ட கர்ப்பிணிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சென்னை பாண்டி பஜார் பகுதியில் உள்ள ஹாட்…

சென்னை தியாகராயர் நகரில் உள்ள பிரபல தனியார் உணவகமான ஹாட் சிப்ஸ்-ல் கரப்பான் பூச்சி இருந்த உணவை சாப்பிட்ட கர்ப்பிணிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சென்னை பாண்டி பஜார் பகுதியில் உள்ள ஹாட் சிப்ஸ் என்ற பிரபலமான சைவ உணவகம் செயல்பட்டு வருகிறது. வார இறுதி நாட்களில் பாண்டி பஜார் பகுதியில் ஷாப்பிங் செய்ய வரும் பெரும்பாலான மக்கள் இந்த உணவகத்தில் உணவு உண்ணுவது வழக்கம்.

இந்நிலையில் இந்த உணவகத்தில் கர்ப்பிணி ஒருவர் தனது குடும்பத்துடன் வந்துள்ளார். உணவு உண்ணும் பொழுது அவர்கள் ஆர்டர் செய்த தாஹி பூரியில் கரப்பான் பூச்சி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அந்த உணவை உண்ட கர்ப்பிணிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு வாந்தி வந்ததால், உடனடியாக சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்,
உணவகத்திற்கு நோட்டீஸ் வழங்கினர். உணவகத்தை முழுமையாக சுத்தம் செய்த பிறகு தான் திறக்க வேண்டும் என்று எச்சரித்தனர்.

ரூபி.காமராஜ்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.