சொந்த மண்ணில் கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா!

நார்வே செஸ்2024 தொடரில் உலகின் நம்பர் ஒன் செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சனை அவரது சொந்த மண்ணில் வீழ்த்தினார் தமிழ்நாடு செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா.   நார்வேயில் சர்வதேச செஸ் தொடர் நடைபெற்று வருகிறது. …

நார்வே செஸ்2024 தொடரில் உலகின் நம்பர் ஒன் செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சனை அவரது சொந்த மண்ணில் வீழ்த்தினார் தமிழ்நாடு செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா.  

நார்வேயில் சர்வதேச செஸ் தொடர் நடைபெற்று வருகிறது.  ஐந்து முறை உலக சாம்பியன் கார்ல்சன் (நார்வே),  நடப்பு உலக சாம்பியன் டிங் லிரென் (சீனா), இந்தியாவின் பிரக்ஞானந்தா உட்பட 6 பேர் ஓபன் பிரிவில் பங்கேற்றனர்.  ஒவ்வொரு சுற்றிலும் இரு முறை மோத வேண்டும்.  கடந்த 27ஆம் தேதி நடைபெற்ற முதல் சுற்றில் வெற்றி பெற்ற பிரக்ஞானந்தா,  இரண்டாவது சுற்றில் டிங் லிரெனிடம் தோல்வி கண்டார்.

இந்நிலையில்,  இன்று நடந்த மூன்றாவது சுற்றில் கார்ல்சனை எதிர்கொண்டார்.  இதில் வெள்ளை காய்களை கொண்டு விளையாடிய பிரக்ஞானந்தா, அபாரமாக செயல்பட்டு கார்ல்சனை வீழ்த்தினார்.  இந்த வெற்றியின் மூலம், 5.5 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறினார். இதன்மூலம் கிளாசிக்கல் செஸ்ஸில் முதன்முறையாக மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.