மீண்டும் இயக்கத்திற்கு திரும்பும் பிரதீப் ரங்கநாதன்!

ஹீரோவாக வலம் வரும் பிரதீப் ரங்கநாதன் மீண்டும் இயக்கத்திற்கு திரும்பவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக பிரதீப் ரங்கநாதன் அறிமுகமானார். இப்படத்தின் பெரும் வெற்றிக்கு பிறகு, லவ் டுடே படத்தை தானே இயக்கி, ஹீரோவாக அறிமுகமானார். இந்த படமும் அவருக்கு நல்ல வெற்றியை தேடித் தந்தது. இதையடுத்து அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்தார்.

டிராகன் படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.  இதனிடையே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் ‘இன்சூரன்ஸ் கம்பெனி’ படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார். அதன் பின்னர்  டூட்  (DUDE) என்ற படத்தில் அவர் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. கீர்த்திவாசன் இயக்கி வரும் இப்படத்தில் பிரதீப்க்கு ஜோடியாக மமிதா பைஜு நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் பிரதீப் ரங்கநாதன் மீண்டும் இயக்கத்திற்கு திரும்பவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி அவர்  இயக்கும் படம் சயின்ஸ் பிக்‌ஷன் ஜானரில் உருவாகவுள்ளதாகவும் அந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.