சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவமனையில், பயிற்சி மருத்துவர்கள் ஊக்கத் தொகை வழங்கப்படாததை கண்டித்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை சேலம் தர்மபுரி நாமக்கல் கள்ளக்குறிச்சி ஈரோடு கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் தலைமை மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது இங்கு தினசரி இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட புறநோயாளிகளாகவும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர் .
இந்த மருத்துவமனையில், பணியாற்றும் 107 பயிற்சி மருத்துவர்களாக இருந்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து பலமுறை மருத்துவமனை நிர்வாகத்திடம் மருத்துவர்கள் கோரிக்கை வைத்தும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்காத காரணத்தால், இன்று ஊக்கத் தொகையை வழங்க வலியுறுத்தி அரசு மருத்துவமனையில் நூற்றுக்கும் மேற்பட்ட பயிற்சி மருத்துவர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மூன்று மாத காலமாக ஊக்கத்தொகை வழங்காமல் அரசு காலம் தாழ்த்தி வருகிறது. கடந்த சில நாட்களாக நாங்கள் இந்த பிரச்சினையை அரசுக்கு கொண்டு செல்ல முயற்சிக்கிறோம். ஊக்கத் தொகை வழங்கப்படாமல் இருப்பதால் நாங்கள்அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக பயிற்சி மருத்துவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். தர்ணா போராட்டத்தின் காரணமாக சேலம் மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை பரபரப்பாக காணப்பட்டது







