நடிகர் பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் திரைப்படம் ‘கல்கி 2898’. இப்படத்தை நாக் அஸ்வின் இயக்குகிறார். ரூ.600 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தில் நடிகர்கள் ராணா டக்குபதி, கமல்ஹாசன், அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இப்படத்தின் முதல்பார்வை போஸ்டரை படக்குழுவினர் சமீபத்தில் வெளியிட்டிருந்தனர். இந்நிலையில், ‘கல்கி 2898’ திரைப்படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. பிரபாஸ் நடிப்பில் வெளியான ஆதிபுருஷ் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்ட நிலையில், அவரது ரசிகர்களிடையே ‘கல்கி 2898’ பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரம் ஒன்றில் நடிகர் துல்கர் சல்மான் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.







