பிரபாஸின் ‘கல்கி 2898 ஏடி’ உலகம் முழுவதும் ரூ.900 கோடி வசூல்! – படக்குழு தகவல்!

பிரபாஸ் நடிப்பில் வெளியாகியுள்ள ‘கல்கி 2898 ஏடி’ திரைப்படம் வெளியான 11 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.900 கோடிக்கும் அதிமாக வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ள படம், ‘கல்கி…

பிரபாஸ் நடிப்பில் வெளியாகியுள்ள ‘கல்கி 2898 ஏடி’ திரைப்படம் வெளியான 11 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.900 கோடிக்கும் அதிமாக வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ள படம், ‘கல்கி 2898’. இதில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, அன்னா பென் உட்பட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ள இந்தப் படம், பான் இந்தியா முறையில் ஜூன் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

அறிவியல் – புராண கதை மிக்சிங்கில் உருவான இப்படம் அதன் அட்டகாசமான கிராஃபிக்ஸ் மறு்றும் மேக்கிங் காட்சிகளில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது. இருப்பினும் திரைக்கதை சோர்வைத் தருவதாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

இதையும் படியுங்கள் : ஆம்ஸ்ட்ராங் படுகொலை – தமிழ்நாடு அரசிடம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய இயக்குநர் பா.ரஞ்சித்…

இந்நிலையில், ரூ.600 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் முதல் நாளில் உலக அளவில் ரூ.191 கோடியும், இரண்டாம் நாளில் மொத்தம் ரூ.295.5 கோடி வரை வசூலித்ததாக அறிவிக்கப்பட்டது. தற்போது இந்தப் படம் 11 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.900 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. படம் பாக்ஸ் ஆஃபீஸில் ரூ.1,000 கோடி வரை வசூலிக்கலாம் என கணிக்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.