துருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சம்!

துருக்கியில் 6.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் எற்பட்டுள்ளது.

துருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் எற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. மேற்கு துருக்கியில் 11 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் அந்நாட்டின் உள்ளூர் நேரப்படி இரவு 7.15 மணிக்கு பதிவாகியிருக்கிறது.

இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியது. இதனால் மக்கள் பீதியில் உறைந்தனர். இஸ்தான்புல், இஸ்மிர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. பலிகேசிர் மாகாணத்தில் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்து இருப்பதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.