சீனாவில் நீடிக்கும் மீட்புப் பணிகள்-பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு

சீனாவில் அதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் நேற்று ஏற்பட்டது. இந்த இயற்கை பேரிடரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65-ஆக அதிகரித்துள்ளது. சீனாவில் சிச்சுவான் மாகாணத்தில் கன்ஜி திபெத்திய சுயாட்சி பகுதியில் உள்ள லூடிங் கவுன்டி பகுதியில் நேற்று…

சீனாவில் அதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் நேற்று ஏற்பட்டது. இந்த இயற்கை பேரிடரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65-ஆக அதிகரித்துள்ளது.

சீனாவில் சிச்சுவான் மாகாணத்தில் கன்ஜி திபெத்திய சுயாட்சி பகுதியில் உள்ள லூடிங் கவுன்டி பகுதியில் நேற்று மதியம் 12.52 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

மலைப் பகுதியான இந்தப் பகுதியில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம். இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகி உள்ளது.
இந்த நிலநடுக்கத்தினால் சீச்சுவான் பகுதிகளில் நிலச் சரிவுகள் ஏற்பட்டன. இதனால் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன. நிலச் சரிவு ஏற்பட்டதில் பெரிய கற்கள் உருண்டு விழுந்து நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டு உள்ளது. இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65 ஆக அதிகரித்துள்ளது.

மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சுமார் 250 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.