பன்முகத்தன்மையே இந்தியாவின் அடையாளம்; பிரதமர் மோடி பெருமிதம்

பன்முகத்தன்மை கொண்ட இந்திய ஜனநாயகம் உலகத்திற்கு முன்னோடியாக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் நடைபெற்ற ஐ.நா.சபை கூட்டத்தின் 76 வது அமர்வில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார். அப்போது…

பன்முகத்தன்மை கொண்ட இந்திய ஜனநாயகம் உலகத்திற்கு முன்னோடியாக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் நடைபெற்ற ஐ.நா.சபை கூட்டத்தின் 76 வது அமர்வில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர், கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத பேரிடரை உலகம், கடந்த ஒன்றரை ஆண்டுகளில் சந்தித்துள்ளதாக தெரிவித்தார். உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு தமது அஞ்சலியை செலுத்துவதாகவும் அவர்களது குடும்பங்களுக்கு தமது இரங்கலை தெரிவித்துக்கொள்வதாகவும் கூறினார்.

இந்தியாவின் பன்முக தன்மைதான் வலுவான ஜனநாயகத்தின் அடையாளம் என்றும், பன்முகத்தன்மை கொண்ட இந்திய ஜனநாயகம் உலகத்திற்கு முன்னோடியாக இருப்பதாகவும் கூறினார். இந்தியா சீர்த்திருத்தங்களை மேற்கொள்ளும்போது, அதன் தாக்கம் உலகம் முழுவதும் எதிரொலிப்பதாகவும் அவர் தெரிவித்தார். உலகத்திற்கான தீவிரவாத அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாக கவலை தெரிவித்த பிரதமர் மோடி, தீவிரவாத ஒழிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் உலக நாடுகள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.