குற்றம்

திருமணமான 10 நாட்களில் ஆண் நண்பர்களுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த பெண் கைது

விழுப்புரம் அருகே, திருமணமான 10 நாட்களில், ஆண் நண்பர்களுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவைச் சேர்ந்த இலியாஸ், விழுப்புரம் அருகே உள்ள பெரம்பை கிராமத்தில் தங்கி, பழைய இரும்புக் கடை நடத்தி வந்தார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த ரீனாபேகம் என்ற பெண்ணுக்கும், இலியாசுக்கும், 10 நாட்களுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில், இலியாஸ் வீட்டில் மயங்கி விழுந்து, இறந்துவிட்டதாகக் கூறி, அவசரம் அவரசமாக சுல்தான்பேட்டை சுடுகாட்டில், உடலை அடக்கம் செய்ய ரீனாபேகம் முயற்சி செய்துள்ளார்.

இதுகுறித்து, இலியாசின் சகோதரர் லிகாட், மரணத்தில் மர்மம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். சுல்தான் பேட்டை சுடுகாட்டுக்கு விரைந்த போலீசார், இலியாசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டனர். அப்போது, உணவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து, தமது ஆண் நண்பர்களான சரண், அசோகன் ஆகியோருடன் சேர்ந்து, ரீனாபேகம் கணவனின் கழுத்தை நெறித்து கொலை செய்தது தெரியவந்தது.

கணவனை கொலை செய்ததற்கு காரணமாக ரீனாபேகம் கூறியது போலீசார் உட்பட அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. திருமணத்திற்கு முன் ரீனாபேகத்திற்கு மதுப்பழக்கம் இருந்துள்ளது அத்துடன் அவருக்கு பலருடன் தொடர்பு இருந்துள்ளது. திருமணத்திற்கு பின் அவரால் முன்னர்போல் சுதந்திரமாக இருக்கமுடியாததால், தனது நண்பர்களுடன் சேர்ந்து இலியாஸை கழுத்தை நெரித்து கொலை செய்ததாக வாக்கு மூலம் அளித்துள்ளார்.

Advertisement:

Related posts

காதலிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகள் இருப்பதை தெரிந்த காதலன் தூக்கிட்டு தற்கொலை..

Saravana Kumar

கோயம்பேட்டில் இளைஞர் ஒருவர் வெட்டி படுகொலை!

Gayathri Venkatesan

ஈரோட்டில் ரூ. 2 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்: 2 பேர் கைது

Gayathri Venkatesan