முக்கியச் செய்திகள் சினிமா

கதாபாத்திரத்துடன் ஒன்றிப் போன பொன்னியின் செல்வன் நடிகர்கள்!

தமிழ் திரைத்துறைக்கு 64 ஆண்டுகாலமாகக் கனவாகவே இருந்த நிலையில் இம்மாதம் 30ஆம் தேதி  உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

இயக்குநர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து வெற்றிகரமாக முடித்துள்ளார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன் வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வறுக்கிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஆதித்ய கரிகாலனாக நடித்துள்ள விக்ரம், வந்திய தேவனாக நடித்துள்ள கார்த்திக், நந்தினி கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஐஸ்வர்யாயும், குந்தவை கதாபாத்திரத்தில் நடித்துள்ள த்ரிஷா ஆகியோரை திரையில் காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

பொன்னியின் செல்வன் நாவலைப் படமாக்குவது மணிரத்னத்திற்கு மட்டும் கனவு இல்லை. ஒட்டு மெத்தத் தமிழ் திரைத்துறையிற்கே 64 ஆண்டுகாலமாகக் கனவாகவே இருந்த நிலையில் இம்மாதம் 30ஆம் தேதி தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

இந்நிலையில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை த்ரிஷா ட்விட்டரில் தனது பெயரைக் குந்தவை என மாற்றியிருந்தார். அவருடன் ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் விக்ரமும் தனது ட்விட்டர் பெயரை ஆதித்ய கரிகாலன் என மாற்றினார்.

மேலும் “சரி. தஞ்சைக்கு வருகிறேன். எட்டுத் திக்கும் புலிக்கொடி நாட்டும் திரைப்பயணம் தொடங்கும் முன் பெருவுடையாரின் ஆசி வேண்டுமல்லவா?குந்தவை, உடன் வருகிறாயா? வந்தியத்தேவன் வருவான்.என்ன நண்பா,வருவாய் தானே?அப்படியே அந்த அருண்மொழியையும் இழுத்து வா!” என பதிவிட்டிருந்தார்.

அவரைத் தொடர்ந்து பொன்னியின் செல்வன் படத்தில் வந்திய தேவனாக நடித்துள்ள கார்த்திக் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் விக்ரமை டாக் செய்து“இளவரசே உங்களுக்காகத் தஞ்சை முதல் லங்கை வரை சென்ற களைப்பே இன்னும் போகவில்லை. As I am suffering from fever I want work from home. வீடியோ காலில் இளவரசியிடம் பேசி sorry சொல்லி விடுகிறேன். Pls excuse me.” எனப் பதிவிட்டிருந்தார்.

இந்த பதிவு வைரலான நிலையில், கார்த்தியின் பதிவிற்குப் பதில் அளிக்கும் வகையில் நடிகர் விகரம் “சரி தான்.‌இளைப்பாறு நண்பா. Detox. Rest. Recuperate. சில போர்களைத் தனியாகச் சென்று தான் வெல்ல வேண்டும். தஞ்சை சென்று நம் அன்பு படைகளைச் சந்தித்தே ஆகவேண்டும். See you on the other side வந்தியத்தேவா.” எனப் பதிவிட்டுள்ளார். இவர்களின் இந்த செயல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பிலிப்பைன்ஸில், ’ராய்’ தாண்டவம் : பலியானோர் எண்ணிக்கை 169 ஆக உயர்வு

EZHILARASAN D

வாக்கு எண்ணும் மையங்களில் திமுக நிர்வாகிகளை அனுமதிக்கக் கூடாது: அதிமுக

G SaravanaKumar

தோப்புக்கரணத்தில் உலக சாதனை

G SaravanaKumar