முக்கியச் செய்திகள் சினிமா

பொன்னியின் செல்வன் 2 அப்டேட் – பிப்ரவரி 14-ல் வெளியாகும் படத்தின் முதல் சிங்கிள்?

நாளை மறுநாள் (பிப்ரவரி 14) பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் இடம் பெற்றுள்ள ஒரு பாடல் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாகிய பொன்னியின் செல்வன் முதல் பாகம், கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி உலகெங்கிலும் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. லைகா புரொடக்சன்ஸ் – மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்த இத்திரைப்படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஷ்வர்யா ராய், சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், விக்ரம் பிரபு, ஷோபிதா, ஐஷ்வர்யா லக்‌ஷ்மி உள்ளிட்ட மிகப் பெரிய நடிகர் பட்டாளம் கால்பதித்திருந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த இத்திரைப்படம், புகழ்பெற்ற எழுத்தாளர் கல்கியின் நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகப்பட்டது. பொன்னியின் செல்வன் முதல் பாகம், ரூ.500 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும், வெற்றிப் படமாகவே பொன்னியின் செல்வன் கருதப்படுகிறது.

முதல் பாகமே ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த நிலையில், பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என்ற கேள்வி ரசிகர்களிடயே எழுந்து வந்தது. அதைத் தொடர்ந்து, பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வரும் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 28ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்தது. இந்நிலையில், நாளை மறுநாள் (பிப்ரவரி 14) பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் இடம் பெற்றுள்ள ஒரு பாடல் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சர்ச்சை சாமியார் அன்னபூரணி அரசு அம்மாவை கைது செய்யக் கோரிக்கை

Arivazhagan Chinnasamy

கட்டப்பஞ்சாயத்து செய்ய வந்தவரிடம் கொள்ளை அடித்த தம்பதி

G SaravanaKumar

அதிமுக தொடர்பான வழக்குகள் – சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு

Web Editor