மணிரத்னம் இயக்கத்தில், தமிழ் சினிமாவில் வசூல் சாதனை படைத்துக் கொண்டிருக்கும் பொன்னியின் செல்வன் 2-ம் பாகத்தின் புதிய மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது.
எழுத்தாளா் கல்கியின் நாவலை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னத்தின் இயக்கத்தில், உருவாக்கப்பட்ட பொன்னியின் செல்வன் படம் தமிழ் சினிமாவில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட படமாகும். பொன்னியின் செல்வன் முதல் பாகம் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி உலகெங்கிலும் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.
இப்படத்தின் முதல் பாகம் ரூ.500 கோடிக்கும் மேல் வசூலித்து பெரும் சாதனை படைத்ததை தொடர்ந்து, கடந்த ஏப்ரல் 28-ம் தேதி களமிறங்கிய பொன்னியின் செல்வனின் இரண்டாம் பாகம் வெளியானது. இந்த படம் 10 நாட்களிலேயே ரூ.300 கோடிக்கு மேல் வசூலை கடந்தது.
லைகா புரொடக்சன்ஸ் – மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்துள்ள இத்திரைப்படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஷ்வர்யா ராய், சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், விக்ரம் பிரபு, ஷோபிதா, ஐஷ்வர்யா லக்ஷ்மி உள்ளிட்ட மிகப் பெரிய நடிகர் பட்டாளம் நடித்துள்ளது. இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் இசை இந்த படத்திற்கு மேலும் வலு சேர்த்தது. இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு இந்திய மொழிகளில் வெளியானது.
இந்த நிலையில், பொன்னியின் செல்வன் 2 படத்தின் புதிய மேக்கிங் வீடியோவைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. மேக்கிங் ஆப் பிஎஸ் 2 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.









