பொன்னாகுடி நதிநீர் இணைப்பு திட்டப் பணிகள்-சபாநாயகர் அப்பாவு ஆய்வு

2023 ஆம் ஆண்டிற்கும் நம்பியார், கருமணியார், தாமிரபரணி ஆறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற நீர்வளத்துறை நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், பணிகளின் தற்போதைய நிலை அடுத்தடுத்து மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவை…

2023 ஆம் ஆண்டிற்கும் நம்பியார், கருமணியார், தாமிரபரணி ஆறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற நீர்வளத்துறை நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், பணிகளின் தற்போதைய நிலை அடுத்தடுத்து மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு பொன்னாகுடியில் நதிநீர் இணைப்பு திட்ட பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.

பின்னர் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மார்ச் 31 ஆம் தேதிக்குள் நதிநீர் இணைப்பு திட்ட அனைத்து பணிகளும் நிறைவடையும்.

அக்டோபர் 31ம் தேதிக்குள் வெள்ளநீர் கால்வாயில் தண்ணீர் செல்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். 237 கோடி மதிப்பீட்டின் கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் உரிமையாளர்களுக்கு இழப்பீடு கொடுக்கப்பட்டுள்ளது. 40 கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட வேண்டிய தேவை உள்ள நிலையில் 30 கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டு அந்த கிராமங்களில் உள்ளவர்களுக்கு பெரும்பாலும் இழப்பீட்டு நிவாரணம் கொடுக்கப்பட்டுவிட்டது.

நூற்றி ஐந்து கோடி ரூபாய் இன்னும் தேவையாக உள்ளது. வந்தவுடன் நிலம் கையகப்படுத்தப்பட்டு உரிமையாளர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும். அவரவர் வங்கி கணக்கில் இழப்பீட்டுத் தொகை செலுத்தப்படும் என்று அப்பாவு தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.