தமிழர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பொங்கல் திருநாள் நாளை (ஜனவரி 15) கொண்டாடப்பட உள்ளது. இதை யொட்டி பள்ளி, கல்லூரி, அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று சென்னை தலைமை செயகத்தில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.
இவ்விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் முருகானந்தம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மேலும் ஐஏஎஸ் அதிகாரிகளும் பங்கேற்றனர். இந்நிகழ்வில் பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டது. தொடர்ந்து அனைவருக்கும் பொங்கல் வழங்கர். ஒருவருக்கொருவர் பொங்கல் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டனர்.







