ஒசூர் அருகே மீட்கப்பட்ட 5 ஒட்டகங்கள் சென்னைக்கு அனுப்பிவைப்பு!

ஓசூர் அருகே சுற்றி திறிந்த 5 ஒட்டகங்களை போலீசார் சென்னை ஊத்துக்கோட்டை தனியார் கோசாலை பகுதிக்கு அனுப்பி வைத்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் கோபச்சந்தரம் என்னும் இடத்தில், கடந்த 15 தினங்களுக்கு…

ஓசூர் அருகே சுற்றி திறிந்த 5 ஒட்டகங்களை போலீசார் சென்னை ஊத்துக்கோட்டை தனியார் கோசாலை பகுதிக்கு அனுப்பி வைத்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் கோபச்சந்தரம் என்னும்
இடத்தில், கடந்த 15 தினங்களுக்கு முன்பு சாலையோரம் 5 ஒட்டகங்களுடன் வட
மாநில தொழிலாளர்கள் இருந்துள்ளனர். அந்த வழியாக சென்ற இந்து அமைப்பினர்
ஒட்டகங்கள் குறித்தும், எங்கு செல்கிறது எனவும் அவர்களிடம் கேள்வி எழுப்பி
உள்ளனர். இதனால், வட மாநில நபர்கள் ஒட்டகங்களை அங்கேயே விட்டுவிட்டு
சென்றுள்ளனர்.

15 நாட்கள் ஆன நிலையில் இதுவரையில் ஒட்டகங்களுக்கு உரிமை கோரி யாரும்
வரவில்லை. மேலும், கோபச்சந்தரம் தனியாருக்கு சொந்தமான ஒரு இடத்தில் 5
ஒட்டகங்களையும் 15 நாட்களுக்கு மேலாக பராமரித்து , உணவு மற்றும் தண்ணீர்
போன்றவற்றை வழங்கினர். மேலும், அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும்
ஒட்டகங்களுக்கு அவ்வப்போது உணவு வழங்கி வந்தனர்.

இந்நிலையில், சூளகிரி காவல் ஆய்வாளர் ரஜினி அவர்கள், ஒட்டகங்களை
கோசோலைக்கு அனுப்ப பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வந்தனர். தொடர்ந்து,
சென்னை ஊத்துக்கோட்டை பகுதியில் உள்ள , பீப்பிள் பெடரேஷன் ஆப் அனிமல்
என்ஜிஓ நடத்தும் தனியார் கோசாலை பகுதிக்கு 5 ஒட்டகங்களும் அனுப்பி வைக்கப்பட்டது.

—-கு.பாலமுருகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.