சிறையில் வாடும் இஸ்லாமியர்கள் விடுதலை குறித்து முதல்வர் விரைவில் முடிவெடுப்பார் – பீட்டர் அல்போன்ஸ் பேட்டி!

நீண்ட காலம் சிறையில் வாடும் இஸ்லாமியர்களின் விடுதலைக்கு தமிழ்நாடு முதல்வர் மனிதாபிமானத்தோடு நடவடிக்கை எடுப்பார் என சிறுபான்மையினர் பிரிவு ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது…

நீண்ட காலம் சிறையில் வாடும் இஸ்லாமியர்களின் விடுதலைக்கு தமிழ்நாடு முதல்வர் மனிதாபிமானத்தோடு நடவடிக்கை எடுப்பார் என சிறுபான்மையினர் பிரிவு ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், அதிமுக முன்னாள் அமைச்சர்களின் ஊழல்களை வெளிப்படுத்த அண்ணாமலையிடம் கூறும் சீமான், பாஜக உறுப்பினர்களின் ஊழல்களையும் வெளிப்படுத்த கூற வேண்டும் என்றார்.

மேலும், பாலியல் குற்றம், ஆள்மாறாட்டம் போன்ற பல வழக்குகளில் தொடர்புடையவர்கள் அனைவருக்கும் புகலிடமாக பாஜக உள்ளதாக அவர் குற்றம்சாட்டினார்.

தமிழக பாஜகவில் சேருவோரிடம் இருந்து பெருமளவில் பணம் பெற்று கொண்ட பின்னே கட்சியில் சேர்ப்பதாக அண்ணாமலை மீது அவர் குற்றம்சாட்டினார்.

—-ம.ஶ்ரீ மரகதம்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.