கடத்தப்பட்ட குழந்தையை 24 மணி நேரத்தில் மீட்ட காவல்துறை; காதல் ஜோடி கைது…

திருப்பூரில் காதல் ஜோடியால் கடத்தப்பட்ட குழந்தையை 24 மணி நேரத்தில் உயிருடன் போலிசார் மீட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டம், திருப்பூர் தெற்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மற்றும் அரசு மருத்துவமனையில் வடமாநிலத்தைச் சேர்ந்த தம்பதி அர்ஜூன் குமார் – கமலினி…

திருப்பூரில் காதல் ஜோடியால் கடத்தப்பட்ட குழந்தையை 24 மணி நேரத்தில் உயிருடன் போலிசார் மீட்டுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம், திருப்பூர் தெற்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மற்றும் அரசு மருத்துவமனையில் வடமாநிலத்தைச் சேர்ந்த தம்பதி அர்ஜூன் குமார் – கமலினி தம்பதியினர் மகப்பேறு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்குக் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பாக ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இந்த நிலையில், அதே மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது போல வந்திருந்த உமா என்கிற பெண் கமலினியின் ஆண் குழந்தையைத் திருடி சென்றார். இவர் குழந்தையை எடுத்து கொண்டு கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை அடிவாரத்தில் உள்ள மல்லிகை பாடி – பரங்கியநத்தம் கிராமத்தைச் சேர்ந்த ராணி என்பவர் தன்னுடன் பனியன் கம்பனியில் பணியாற்றியதால் அவருக்கு தொடர்பு கொண்டு குழந்தை பிறந்துள்ளதாகவும் தான் குழந்தை எடுத்து வருவதாகவும் கூறி பேருந்து மூலம் பச்சிளம் குழந்தை எடுத்துக்கொண்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் திருப்பூர் போலிசாருக்கு தகவல் கிடைக்க குழந்தை காணாமல் போனது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். திருப்பூர் காவல் ஆணையர் பிரவின் குமார் அபினவ் உத்தரவின் பேரில் கள்ளக்குறிச்சி அருகே கடத்தப்பட்ட குழந்தை இருப்பதாகத் தகவல் கிடைத்ததன் பேரில் கள்ளக்குறிச்சியில் உள்ள சிறப்புப் புலனாய்வு பிரிவு போலிஸ் ஏ டி எஸ் பி மற்றும் டி எஸ் பி உதவியுடன் கள்ளக்குறிச்சி பதுங்கி இருந்த உமா மற்றும் பச்சிளம் குழந்தையை மீட்டனர்.

பிறகு உமா மற்றும் அவருக்கும் அடைக்களம் கொடுத்த ராணி ஆகியோரையும் கைது செய்து, கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் பிரிவில் பச்சிளம் குழந்தையை அனுமதித்தனர்.

பிறகு திருப்பூர் மாவட்ட போலிசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் ஆம்புலன்ஸ் மூலம் குழந்தையைத் திருப்பூருக்கு அனுப்பி வைத்தனர். குழந்தையை கடத்திய உமா – விஜய் தம்பதியினர் கடந்த ஒரு வருடமாகக் காதலித்து வந்த நிலையில் குழந்தை இல்லை என்பதால் குழந்தையைத் திருடியதாக போலிசர் முதற்கட்ட விசாரணையில் உமா கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.