சாத்தான்குளம் குற்றவியல் நீதிபதி சரவணனுக்கு, டிஐஜி உத்தரவின் பேரில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கில் அளிக்கப்பட்ட தளர்வின்போது தூத்துக்குடி சாத்தான்குளத்த்தை சேர்ந்த பென்னிக்ஸும் அவரது தந்தை ஜெயராஜும் அதிக நேரம் செல்போன் கடையைத் திறந்து வைத்திருந்ததால் அவர்களை போலீஸார் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். பின்னர் காயங்களுடன் கோவில்பட்டி கிளைச்சிறையில் அனுமதிக்கப்பட்ட இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். அவர்கள் இருவரும் போலீஸாரால் கடுமையாகத் தாக்கப்பட்டதில் உயிரிழந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அப்போது அவர்களை கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்க உத்தரவிட்டவர் சாத்தான்குளம் குற்றவியல் நீதிபதி சரவணன்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தற்போது, ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கு தொடர்பாக டெல்லி சிபிஐ அதிகாரிகள் விசாரணை முடித்து நீதிமன்றத்தில் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர். கடந்த 2 நாள்களாக சிபிஐ அதிகாரிகள் சாத்தான்குளம், பேய்க்குளம் பகுதியில் மீண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஜெயராஜ், பென்னிக்ஸை கொலை வழக்கு தொடர்பாக சாத்தான்குளம் நீதிபதிக்கு மர்ம நபர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் அளித்த புகாரின் பேரில் நெல்லை டிஐஜி உத்தரவிட்டதன் அடிப்படையில் தூத்துக்குடி ஆயுதபடையில் உள்ள காவலர் ஒருவர் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புடன் நீதிபதியின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டுள்ளார்.