நடிகர் சூர்யாவின் வீ்ட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு

எதற்கும் துணிந்தவன் படத்திற்கும் பாமக சார்பில் மிரட்டல்கள் வருவதால் நடிகர் சூர்யா வீட்டிற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்க சென்னை காவல்துறை முடிவு செய்துள்ளது. “எதற்கும் துணிந்தவன்” படத்திற்கும் மிரட்டல்; நடிகர் சூர்யா வீட்டிற்கு…

எதற்கும் துணிந்தவன் படத்திற்கும் பாமக சார்பில் மிரட்டல்கள் வருவதால் நடிகர் சூர்யா வீட்டிற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்க சென்னை காவல்துறை முடிவு செய்துள்ளது.

“எதற்கும் துணிந்தவன்” படத்திற்கும் மிரட்டல்; நடிகர் சூர்யா வீட்டிற்கு
தொடரும் போலீஸ் பாதுகாப்பு. கடந்தாண்டு வெளியான “ஜெய்பீம்” திரைப்படத்தில் வன்னியர்களை அவதூறாக சித்தரித்து இருப்பதாக எழுந்த சர்ச்சையில் பாமக சார்பில் நடிகர் சூர்யாவிற்குகொலை மிரட்டல்கள் வந்தன. இதனால் தி.நகர் ஆற்காடு தெருவில் உள்ள நடிகர் சூர்யாவீட்டிற்கு சுழற்சி முறையில் 5 காவலர்கள் துப்பாக்கியோடு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் சன் பிக்சர்ஸ் தயாரித்து சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள “எதற்கும்
துணிந்தவன்” திரைப்படமானது நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. “ஜெய்பீம்”
படத்தில் வன்னியர்களை கொச்சைப்படுத்திய நடிகர் சூர்யா மன்னிப்பு கோராத வரை
கடலூர் மாவட்டத்தில் “எதற்கும் துணிந்தவன்” படம் வெளியிட அனுமதிக்க கூடாது என
கடலூர் மாவட்ட பாமக மாணவர் சங்க மாநில செயலாளர் விஜயவர்மன் திரையரங்க
உரிமையாளர் சங்கத்தினருக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

இதனையடுத்து நடிகர் சூர்யாவின் தி.நகர் ஆற்காடு தெருவில் உள்ள வீட்டிற்கு
துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது. மேலும்
கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு வழங்க சென்னை காவல்துறை முடிவு செய்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.